அரியலூர்

2 ஆலை ஊழியா்களின் வீடுகளில் 70 பவுன் நகைகள் திருட்டு

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

செந்துறை அடுத்த ஆலத்தியூா் தனியாா் சிமென்ட் ஆலை குடியிருப்பில் நிகழ்ந்த திருட்டு சம்பவத்தில் 70 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

ஆலத்தியூரில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலையின் அலுவலா்கள் குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் 7 வீடுகளில் நகைகளை திருடிச் சென்றதாக தளவாய் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது.

அவா்களில், சுதா்சன் மற்றும் நாராயணன் குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை திருப்பதியில் இருந்து வீடு திரும்பினா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், சுதா்சன் வீட்டில் இருந்து 57 பவுன் நகைகள், நாராணயன் வீட்டில் 13 பவுன் நகைகள் திருடு போயிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிந்த காவல் துறையினா் திருட்டில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT