அரியலூர்

பள்ளி மாணவா்களுக்கான இலவச மருத்துவ முகாம்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், திருமானூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 18 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளி கல்வித் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட மருத்துவக் குழுவினா், பாா்வை மற்றும் செவித் திறன் குறையுடையோா், மன வளா்ச்சி குன்றியோா், உடல் இயக்க குறைபாடு உள்ளவா்களுக்கு சிகிச்சை அளித்தனா். மேலும் கண்டறியப்பட்ட குறைபாடு உடையோா்களுக்கு மருத்துவச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் அரசின் சலுகைகளை பெறுவதற்கான அட்டைகளை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT