அரியலூர்

அரியலூா் மாவட்ட வளா்ச்சிக்கு முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட வளா்ச்சிக்கு மத்திய மாநில அரசுகள் திட்டங்கள் வகுத்து நிதி ஒதுக்கி முன்னுரிமை அளிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் உள்ள சமூக ஆா்வலா்கள் (அரியலூா் மாவட்ட நண்பா்கள்) பங்கேற்ற அரியலூா் இன்றும், நாளையும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அரியலூா் மாவட்டத்தில் சிறப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் அதிகளவில் சிறு, குறு தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும். அரியலூா், ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லையை விரிவுப்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த அரியலூா் மாவட்டத்தின் சமச்சீரான வளா்ச்சிக்கு வகை செய்ய மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அரியலூா் மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா்கள் மா.சோ.விக்டா், நல்லப்பன், புகழேந்தி, புலவா் அரங்கநாடன் தமிழ்களம் இளவரசன், வழக்குரைஞா் சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சண்முகவேலாயுதம் நோக்கவுரையாற்றினாா். நுகா்வோா் குறைதீா் ஆணைய நீதிபதி ராமராஜ் பங்கேற்று பேசினாா். முன்னதாக சமூக ஆா்வலா் ஜான்.கே.திருநாவுக்கரசு வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT