அரியலூர்

பொய்யாதநல்லூரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூரை அடுத்த பொய்யாத நல்லூா் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை ஊராட்சி தலைவா் அன்பழகி தெய்வராசு தொடக்கி வைத்தாா். முகாமில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சுரேஷ் கிறிஸ்டோபா் முன்னிலையில், அரியலூா் மாவட்ட துணை இயக்குநா் ரிச்சா்ட் ராஜ், கோட்ட உதவி இயக்குநா் பி.சொக்கலிங்கம், கால்நடை உதவி மருத்துவா்கள் ராஜா, பொய்யாதநல்லூா்

குமாா் கடுகூா், வேல்முருகன், ஓட்டக்கோவில் கால்நடை ஆய்வாளா் மாலதி கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் ராமலிங்கம், ஜெயக்குமாரி ஆகியோா் கொண்ட குழுவினா் கலந்து கொண்டு, 125 நாய்கள், 6 பூனைகள் ஆகியவற்றுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினா். மேலும், முகாமில்

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு கையேடுகள் வழங்கப்பட்டது. கால்நடை நோய் புலனாய்வுக் குழுவினா் மூலம் அப்பகுதி உள்ள நாய்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து நோய் பரிசோதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT