அரியலூர்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழநாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் அரியலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சத்துணவு அங்கன்வாடித் திட்டங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களுக்கு வருவாய் கிராம உதவியாளா்களுக்கு இணையாக அகவிலைப்படியுடன் ரூ. 6,750 மாதாந்திர சிறப்பு ஓய்வூதியமாக வழங்க வேண்டும். இதேபோல் பணியில் உள்ளவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசுத் துறைகளில் காலி பணியிடங்களில் 50 சதவீதத்தை ஒதுக்கி தகுதியுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களை பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும். சிற்றுண்டித் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா்பழனிவேல் தலைமை வகித்தாா். செயலா் தமிழரசன், பொருளாளா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT