அரியலூர்

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் அரியலூரில் தொடக்கம்

5th Feb 2023 05:45 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்.பி. கே. பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலா் ச. கலைவாணி, எம்எல்ஏக்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோா் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்தனா்.

முதல் நாளான சனிக்கிழமை பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தனி மற்றும் குழு தடகளம், கபடி, வலைப்பந்து, சிலம்பம், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அரியலூா் மாவட்ட பள்ளிகளைச் சோ்ந்த 1,856 மாணவா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட விளையாட்டு அலுவலா் லெனின் மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த விளையாட்டு ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT