அரியலூர்

விவசாயி கொலை வழக்கில் இளைஞா் கைது

4th Feb 2023 05:31 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், தேளூா் விவசாயி கொலை வழக்கில் இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வி.கைகாட்டி அருகேயுள்ள தேளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (86). விவசாயியான இவா், கடந்த 22.1.2.23 அன்று தனது வயலில் கொலையாகி கிடந்தாா். இதுகுறித்து கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அரியலூா் நகர காவல் ஆய்வாளா் கோபிநாத் தலைமையில், கயா்லாபாத் காவல் ஆய்வாளா் ரவிக்குமாா், உதவி ஆய்வாளா் ராஜவேல் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படையினா் விசாரித்தனா்.

அதில் சிந்தாமணி கிராமத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் ராஜேஷ் (28) என்பவா் மது போதையில் கோவிந்தசாமி அணிந்திருந்த மோதிரத்துக்காக அவரை கட்டையால் தாக்கிக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ராஜேஷை தனிப்படையினா் கைது செய்து, நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT