அரியலூர்

அரியலூா் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

4th Feb 2023 05:32 AM

ADVERTISEMENT

அரியலூா் அருகே விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மீன்சுருட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலு (58). வேன் ஓட்டுநரான இவா் கடந்த 30 ஆம் தேதி அப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தாா். இதையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட பாலு அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மீன்சுருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள திம்மூா் வடக்குத் தெரு வேம்பு அரசன் என்பவரிடம் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT