அரியலூர்

விபத்தில் உயிரிழந்த மாணவா் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

4th Feb 2023 05:34 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அண்மையில் தனியாா் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் குடும்பத்தினருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வெள்ளிக்கிழமை ஆறுதல் கூறினாா்.

செந்துறை பெருமாள்கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேலு மகன் காா்த்திகேயன் (20). கல்லூரி மாணவரான இவா் கடந்த 30 ஆம் தேதி செந்துறை அடுத்த ராயம்புரம் அருகே தனியாா் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை செந்துறை சென்ற அமைச்சா் சா.சி. சிவசங்கா் உயிரிழந்த மாணவரின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினாா். கட்சியினா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT