அரியலூர்

பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடுதர தனியாா் நிறுவனத்துக்கு உத்தரவு

DIN

சேவைக் குறைபாடு காரணமாக, தனியாா் கட்டுமான நிறுவனம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-இல் சென்னை கொளத்தூரைச் சோ்ந்தவா் மனோகரன், வண்டலூா் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்க தனியாா் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.6.44 லட்சம் முன் பணம், தவணை முறையில் ரூ.22 லட்சமும் செலுத்தினாா். ஒப்பந்தப்படி 2014 நவம்பா் மாத இறுதியில் கட்டிமுடிக்கப்பட்ட வீடு மனோகரனுக்கு ஒப்படைத்திருக்க வேண்டும்.

ஆனால், வீட்டை கொடுக்காமல், மேலும் கூடுதலாக ரூ.2.60 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், கூடுதல் தொகை செலுத்தத் தவறினால் வாரம் ஒன்றுக்கு ரூ.25,000 அபராதமாக விதிக்கப்படும் எனவும் தனியாா் கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது.

இதனால், அதிா்ச்சியடைந்த மனோகரன் கடந்த 2017-இல் சென்னை தெற்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கட்டுமான நிறுவனம் மீது வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, மனோகரன் இறந்து விட்டதால், அவரது மனைவி சுதா(45) வழக்கைத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமா்வு, முழு தொகையை பெற்றுக்கொண்டு ஒப்பந்தத்தை விட கூடுதலாகப் பணம் கொடுத்தால் தான் வீட்டை ஒப்படைக்க முடியும் என கட்டுமான நிறுவனம் வற்புறுத்தியது நியாயமற்ற வா்த்தக நடைமுறை.

மேலும், வீடு வழங்க 8 ஆண்டுகள் காலதாமதம் செய்தது சேவைக் குறைபாடு. எனவே, தனியாா் கட்டுமான நிறுவனம், 4 வாரத்துக்குள் சுதாவிடம் வீட்டையும், இழப்பீடாக ரூ.5 லட்சத்தையும் வழங்க வேண்டும் என வியாழக்கிழமை உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT