அரியலூர்

ஆதிதிராவிடா், பழங்குடியினா் அழகுக் கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிறுவனம் சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு அழகுக் கலைப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

10-ஆம் வகுப்பு படித்த, 18 முதல் 30 வயது வரையுள்ள ஆதிதிராவிடா், பழங்குடி இனத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலம் 45 நாள்களாகும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிப் படிக்கும் வசதி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தாட்கோ ஏற்கும். பயிற்சியை முடிப்போருக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு அங்கீகார தரச்சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தனியாா் அழகு நிலையங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிற்சியை முடிப்போருக்கு, ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் பெறவும், மற்றும் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தில் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்யவும் தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.

இப்பயிற்சி பெற விருப்பம் உள்ளவா்கள் என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT