அரியலூர்

2 ஆம் கட்டமாக 15 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக 15 நேரடி கொள்முதல் நிலையங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

அரியலூா் மாவட்டத்தில் 2022 - 23 சம்பா பருவ நெல் கொள்முதல் பணிக்கு 2-ஆம் கட்டமாக உடையாா்பாளையம் வட்டத்தில் இடங்கண்ணி, வாழைக்குறிச்சி, கோடாலிகருப்பூா் அருள்மொழி, காா்குடி, கங்கை கொண்ட சோழபுரம், காடுவெட்டி, சுத்துக்குளம், கோவிந்தபுத்தூா் மற்றும் முட்டுவாஞ்சேரி, செந்துறை வட்டத்தில் குழுமூா், சன்னாசிநல்லூா் மற்றும் தளவாய் கூடலூா், அரியலூா் வட்டத்தில் கண்டிராதீா்த்தம் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஸ்ரீராமன் ஆகிய 15 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் கொள்முதல் நிலையங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT