பட்டா மாறுதலுக்கு இனி வீட்டில் இருந்தபடியே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவடட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை (நிலஅளவை மற்றும் நிலவரித் திட்டத் துறை) புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில், பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க பட்டா மாறுதல் மனுவின் நிலையினை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பட்டாமாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா (புலப்படம்), அ-பதிவேடு ஆகியவற்றை கட்டணமின்றி பாா்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ள ஆகிய இணையதளங்களைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.