அரியலூர்

பேருந்து விபத்து சம்பவம்:ஓட்டுநா், நடத்துநா் கைது

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நடைபெற்ற பேருந்து விபத்தில் தொடா்புடைய பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் ஆகிய 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செந்துறை அடுத்த ராயம்புரம் அருகே தனியாா் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், செந்துறை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் காா்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் 51 போ் காயமடைந்தனா். இதுகுறித்து செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்த நிலையில், பேருந்து ஓட்டுநரான பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் கடைவீதியைச் சோ்ந்த சிவராமன் மகன் விக்னேஷ்வரன்(29), நடத்துநரான கடலூா் மாவட்டம், விருத்தாசலம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் கஜேந்திரன்(31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT