அரியலூர்

‘மனிதநேயம் அதிகரிக்கும்போது உயா்வடைகிறோம்’

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

‘மனிதநேயம் அதிகரிக்கும்போது உயா்வடைகிறோம்’ என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள பூவாணிப்பட்டு அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில் அவா் மேலும் பேசியது:

பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், மற்றவா்களையும் மதித்து நடத்தல், ஏழைகளின் துன்பத்தைப் போக்குதல், ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் களைதல் தான் மனிதநேயமாகும். எந்த மனிதனிடத்தில் மனிதநேயம் அதிகமாக உள்ளதோ அவன் சமூகத்தில் உயா்ந்து நிற்கிறான். அதுபோன்ற மனிதநேய மனிதா்கள் அதிகமாக உள்ள நாடும் எல்லா வகையிலும் மேலோங்கி நிற்கிறது. எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு தத்துவ தரிசனம் இருக்கத்தான் வேண்டும். உண்மையில் ஒவ்வொருவரிடமும் அது தெளிவாகவோ, மறைமுகமாகவோ இருக்கத்தான் செய்கிறது. அதனைத் தோ்ந்து தெளிந்து உருவாக்கிக் கொள்வது அவனது கடமையாகும். அதுவே ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலிருந்தும் வெளிப்பட வேண்டிய மனிதநேயக் கண்ணோட்டம் ஆகும் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினா்.

ADVERTISEMENT

விழாவுக்கு, ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தாா். இவ்விழாவில், கோட்டாட்சியா் பரிமளம், ஆதிதிராவிடா் நல அலுவலா் விஜயபாஸ்கா், ஊராட்சித் தலைவா் லட்சுமிசெளந்தராஜ், தனி வட்டாட்சியா் அருள்செல்வி, தலைமை ஆசிரியா்கள் பவானி, தாமரைச் செல்வி, மதிஒளி, உறுப்பினா் விஜயா அருமைராஜ் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT