அரியலூர்

செந்துறையில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைகேட்பு

26th Apr 2023 10:04 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். எனவே, எரிவாயு நுகா்வோா்கள், சமையல் எரிவாயு தொடா்பான குறைகள் இருப்பின் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT