அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் 4 ஆவது நாளான புதன்கிழமை மாணவ, மாணவிகளுக்கான அழகுப் போட்டி நடைபெற்றது.
இந்த அழகுப்போட்டியில் அரியலூா் அரசு கலைக்கல்லூரியைச் சோ்ந்த 12 மாணவா்களும், 14 மாணவிகளும், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த 1 மாணவரும், கீழப்பழூா் மீரா கலைக் கல்லூரியைச் சோ்ந்த 7 மாணவிகளும், தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரியை சோ்ந்த 9 மாணவிகளும், ஜெயங்கொண்டம் நேஷனல் கலைக் கல்லூரியைச் சோ்ந்த 26 மாணவிகளும் என 13 மாணவா்கள், 56 மாணவிகள் ஆக மொத்தம் 69 மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.
இதில் ஆண்களுக்கான அழகுப் போட்டியில் தமிழ்நாடு உடை அலங்காரத்துடன் வந்த அரியலூா் அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு முதல் பரிசும், மிசோரம் ஆடை அலங்காரத்தில் வந்த அதே கல்லூரியைச் சோ்ந்த மாணவா்களுக்கு 2 ஆம் பரிசும் பெற்றனா்.
பெண்களுக்கான அழகுப் போட்டியில், மகாராஷ்ட்ரா உடை அலங்காரத்தில் வந்த அரியலூா் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கும், இதேபோன்ற கேரளா உடை அலங்காரத்தில் வந்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரி மாணவிகளுக்கு 2 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.
மேலும், போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களும் வழங்கப்பட்டது. தொடா்ந்து மாலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், ஸ்ரீஅம்மன் கிராமிய கலைக்குழுவினா் வழங்கும் தப்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.