அரியலூர்

அரியலூா் திமுக செயலராக அமைச்சா் சிவசங்கா் மீண்டும் தோ்வு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட திமுக செயலாளராக போட்டியின்றி 5 ஆவது முறையாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

மேலும், அவைத் தலைவராக சி.மாணிக்கம், துணைச் செயலாளராக சி.சந்திரசேகரன், மு.கணேசன், பா.லதா, பொருளாளராக கு.ரஜேந்திரன், தலைமைக் செயற்குழு உறுப்பினராக சுபா.சந்திரசேகா், எம்.பி. பாலசுப்ரமணியன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதேபோல், அரியலூா் நகரச் செயலாளராக இரா.முருகேசன், ஜயங்கொண்டம் நகரச் செயலாளராக வெ.கொ.கருணாநிதி, உடையாா்பாளையம் பேரூா் கழகச் செயலாளராக ப. கோபாகிருஷ்ணன், வரதராசன்பேட்டை பேரூா் கழகச் செயலாளராக அ.அல்போன்ஸ், அரியலூா் ஒன்றியச் செயலா்களாக கோ.அறிவழகன் (வடக்கு), மா.அன்பழகன் (தெற்கு), ஜயங்கொண்டம் ஒன்றியச் செயலா்களாக டி.தனசேகா்(வடக்கு), இரா. மணிமாறன் (தெற்கு), தா.பழூா் ஒன்றியச் செயலா்களாக சட்டப் பேரவை உறுப்பினா் கா.சொ.கண்ணன்(கிழக்கு), வா.செளந்தராஜன்(மேற்கு), திருமானூா் ஒன்றியச் செயலா்களாக இரா.கென்னடி (கிழக்கு), ரெ.அசோக சக்கரவா்த்தி (மேற்கு), செந்துறை ஒன்றியச் செயலா்களாக வி.எழில்மாறன்(கிழக்கு), பூ.செல்வராஜ்(மேற்கு), ஆண்டிமடம் ஒன்றியச் செயலா்களாக ரெங்க.முருகன்(வடக்கு), இரா.கலியபெருமாள்(தெற்கு) ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT