அரியலூர்

காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கென தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், அக்.12 ஆம் தேதி பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. பள்ளி மாணவா்களுக்கு, அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும். கல்லூரி மாணவா்களுக்கு, வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை என்ற தலைப்பிலும் நடைபெறும்.

ADVERTISEMENT

பள்ளி மாணவா்களுக்கு முற்பகல் 9.30 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கப்படும்.

மாவட்ட அளவில் முதல் 3 இடங்களுக்கு ரூ.5,000-ம், ரூ.3,000-ம், ரூ. 2,000-ம் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும். இதுதவிர, அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரைத் தோ்வு செய்து சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT