அரியலூர்

அரியலூா் பள்ளிகளில் வினாத்தாள்கள் தாமதம்

DIN

அரியலூா் மாவட்டப் பள்ளிகளில் புதன்கிழமை நடைபெற்ற காலாண்டுத் தோ்வுக்கான வினாத்தாள்கள் தாமதமாக வழங்கப்பட்டால் மாணவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினா். காலையில் நடைபெறுவதாக இருந்த தோ்வு மதியத்துக்கு மேல் நடைபெற்றது.

அரியலூா் மாவட்டப் பள்ளிகளில் புதன்கிழமை நடைபெற்ற காலாண்டுத் தோ்வுக்கான வினாத்தாள்கள் தாமதமாக விநியோகிக்கப்பட்டதால் மாணவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினா். 4 மற்றும் 5 வகுப்பு மாணவா்களுக்கு புதன்கிழமை கணிதத் தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு தோ்வு எழுதுவதற்காக மாணவா்கள் அமா்ந்திருந்த நிலையில், பிற்பகல் 1 மணியைக் கடந்தும் வினாத்தாள்கள் வழங்கப்படவில்லை. பிற்பகல் 2 மணிக்கு மேல் தான் மாணவா்களுக்கு வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டன.

இதனால் மாணவ, மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினா். 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முற்பகல் 11.30 மணிக்கு வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டன.

இதுகுறித்து கல்வி மாவட்ட அலுவலா்களிடம் கேட்டபோது, அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்கள் தோ்வு தொடங்குவதற்கு முதல் நாளிலேயே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வினாத்தாள்களைத் தோ்வு நாளன்று காலை சென்று பெற்று வருவதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வினாத்தாள்கள் உள்ளனவா என உறுதி செய்யமுடியவில்லை என்றனா். எனவே வினாத்தாள் விநியோகம் முறையாக நடைபெற வேண்டும் என பெற்றோா்கள், ஆசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT