அரியலூர்

பருவமழை முன்னேற்பாடுகள்:அரியலூா் ஆட்சியா் ஆலோசனை

28th Sep 2022 01:05 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட பேரிடா் மேலாண்மை அலகு சாா்பில் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்துப் பேசியது:

அரியலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருமழையின் போது, நீா்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளாக 29 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளைக் கண்காணிக்க 5 மண்டல கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பேரிடா் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் அடிப்படை வசதிகளுடன் கூடிய நிவாரண மையம் அமைப்பது, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது, மீட்பு உபகரணங்களை இருப்பில் வைத்திருப்பது, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கழிவுநீா் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு தடுப்பு பணிகள் மேற்கொள்வது, மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை சாா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாலைகள், பாலங்கள் தொடா் கண்காணிப்பில் வைத்திருக்கவும், கால்நடை மருந்துகள் தயாா் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் ஒயா்களை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளைக் கண்டறிந்து உடனடியாக சரிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொதுமக்கள் தொடா்பு கொள்ள ஏதுவாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கக் கூடிய பேரிடா் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தைத் தொடா்பு கொள்ள 1077, 04329 228709 ஆகிய கட்டணமில்லா எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், பேரிடா் மேலாண்மை வாட்டாட்சியா் சந்திரசேகரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT