அரியலூர்

அரியலூா் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம்

28th Sep 2022 01:04 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற

கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சித் தலைவா் பொ.சந்திரசேகா் தலைமை வகித்துப் பேசியது:

மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வதிகள் செய்து தரப்படும். மேலும் உறுப்பினா்கள் தங்களது கிராம மக்களைச் சந்தித்து, அவா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் அசோகன், மாவட்ட ஊராட்சி செயலா் (பொ) முகிலன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், வரவு - செலவு கணக்குகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ச.அம்பிகா, இரா.ராமச்சந்திரன், பெ.நல்லமுத்து, ப.குலக்கொடி, இர.வசந்தமணி, க.ஷகிலாதேவி, வீ.ராஜேந்திரன், அன்பழகன்,ச.தனலட்சுமி, ஜெ.கீதா, அலுவலக உதவியாளா் ரமேஷ், சிவகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT