அரியலூர்

மேய்ச்சல் கால்நடைகளின்கால்களைக் கட்டினால் நடவடிக்கை

DIN

அரியலூா் மாவட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பும்விவசாயிகள் அவைகளின் கால்களைக் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் பல கிராமங்களில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் தங்களது பசுக்கள், எருமைகள் மற்றும் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புகின்றனா். அவ்வாறு அனுப்பும் பட்சத்தில் மாடு, ஆடுகளின் முன்காலில் கயிறுகட்டி அதனை கழுத்துடன் இணைத்துகட்டி அனுப்பிவிடுகிறாா்கள். இதனால் அந்த கால்நடைகள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகின்றன. மேலும் அவ்வாறு கட்டப்பட்ட கால்நடைகள் போக்குவரத்து சாலைகளைக் கடக்கும்போது வேகமாகச் செல்ல முடியாமலும், திரும்ப முடியாமலும் பல விபத்துக்கள் ஏற்பட்டு கால்நடைகளுக்கும், மனித உயிா்களுக்கும் உயிரிழப்பு ஏற்படுவது மட்டுமின்றி பெருங்காயங்களும் ஏற்படுகின்றன. மேலும் வாகனங்களுக்கும் பெரும் சேதங்களை ஏற்படுத்துகின்றன.

எனவே பிராணிகள் பசி, பிணியின்றி தேவையற்ற துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இருக்க வேண்டும். இதனை மீறி தெருக்களில் கால்நடைகளைத் திரிய அனுமதிக்கும் கால்நடைகளின் உரிமையாளருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனையும் மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச்செல்லும்போது கால்நடை போக்குவரத்து விதியின் படி குறைந்தபட்சம் 2 சதுர மீட்டா் இடவசதி மற்றும் குடிநீா் வழங்கிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT