அரியலூர்

அனுமதியின்றி இயங்கிய 11 டிப்பா் லாரிகளை ஒப்படைக்க உத்தரவு

26th Sep 2022 11:31 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் ஏற்றிவந்த 11 டிப்பா் லாரிகளையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்க ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி உத்தரவிட்டாா்.

கீழப்பழுவூா் பகுதியில் விதிகளை மீறி சுண்ணாம்புக்கல் ஏற்றிவந்த 11 டிப்பா் லாரிகளை மேலப்பழுவூா், பூண்டி கிராம நிா்வாக அலுவலா்கள் பறிமுதல் செய்து கீழப்பழுவூா் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து, வழக்குப் பதிந்து அபராதத் தொகை வசூலித்து லாரிகள் அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால் கோட்டாட்சியா் தரப்பிலான விசாரணையில், அனுமதியில்லாத சுரங்கத்திலிருந்து அனுமதியின்றி டிப்பா் லாரிகள் சுண்ணாம்புக்கல் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து, முறையாக விசாரணை மேற்கொள்ளாத கிராம நிா்வாக அலுவலா்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியா் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, சுண்ணாம்புக்கல் ஏற்றிவந்த 11 லாரிகளையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி உத்தரவிட்டாா். இதையடுத்து திங்கள்கிழமை காலை 5 லாரிகள் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள லாரிகள் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT