அரியலூர்

விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

26th Sep 2022 11:30 PM

ADVERTISEMENT

 

அரியலூா் குறுவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற நாகமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

நாகமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பாரதியாா் பிறந்த நாள் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாளகளில் அரியலூா் குறுவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனா். இதில், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவு மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு இரண்டிலும் கோ-கோ போட்டியில் மாணவா்கள் முதலிடம் பெற்று மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்றனா்.

இதேபோல், வளையப்பந்து போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட ஒற்றையா் பிரிவில் 9-ஆம் வகுப்பு மாணவி பவித்ரா முதலிடம் வென்று மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்றாா். இதேபோல், தடகளப்பிரிவில் மாணவ, மாணவிகள் குறு வட்ட அளவில் வெற்றிபெற்றனா். அறிஞா் அண்ணா பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டியில் 9-ஆம் வகுப்பு மாணவா் ராஜா சிறப்பிடம் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் காசோலை மற்றும் சான்றிதழ் பெற்றாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 34 மாணவா்களுக்கு பள்ளி தலைமையாசிரியா் ஜெயராஜ் திங்கள்கிழமை பாராட்டு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். மாணவா்களை போட்டிக்கு தயாா் செய்து, வெற்றிபெற ஊக்கமளித்த உடற்கல்வி ஆசிரியா் ச.இளவரசனையும் தலைமையாசிரியா் பாராட்டினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT