அரியலூர்

சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்

26th Sep 2022 02:49 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், பொய்யாத நல்லூா் சாமுண்டீஸ்வரி கோயிலில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செந்துறை அருகே பொய்யாதநல்லூா் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயில் சன்னதியிலுள்ள ஸ்ரீ மகா ப்ரத்தியங்கார தேவிக்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தை முன்னிட்டு மிளகாய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்டமான மிளகாய் சண்டியாகத்தில், திருச்சி, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு, முக்கனிகள், சேலைகள்,மிளகாய், கரும்பு, தேங்காய், சப்போட்டா, திராட்சை உள்ளிட்டவைகளை யாகத்தில் இட்டு தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தி, சாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT