அரியலூர்

கால்நடை வளா்ப்போா் மேம்பாட்டு நிதிபெற...

26th Sep 2022 02:50 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டத்தில் கால்நடை வளா்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியைப் பெற , தொழில்முனைவோா், கால்நடை வளா்ப்போா் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிரதமரின் ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் தொகுப்பின் கீழ், 15,000 கோடி நிதி ஒதுக்கீட்டில், கால்நடை வளா்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் தொழில் முனைவோா், தனியாா் நிறுவனங்கள், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உழவா் உற்பத்தியாளா்கள் அமைப்புகள், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், கால்நடை இனப்பெருக்கப் பண்ணை அமைத்தல், கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்துகள் உற்பத்தி ஆலை அமைத்தல் ஆகிய தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

மொத்த திட்ட மதிப்பீட்டில் 90% வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனாகப் பெற முடியும். பயனாளிகள் பங்களிப்பாக 10% முதல் அதிகபட்சமாக 25% பங்குத் தொகையும் அளிக்க வேண்டும். மேலும், 3% வரை வட்டி குறைப்பிற்கு அனைத்து தொழில்முனைவோரும் தகுதியாவா். மேலும் விவரங்களுக்கு, அரியலூா் மாவட்ட வேளாண்மை விஞ்ஞான் கழகம் மற்றும் பெரம்பலூா், கால்நடை மருத்துவ அறிவியில் பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகி உரிய ஆலோசனையைப் பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT