அரியலூர்

ஊராட்சித் தலைவா் மீது உறுப்பினா்கள் புகாா்

26th Sep 2022 11:31 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், கோவிந்தபுத்தூா் ஊராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலைவரின் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதியிடம் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில், கோவிந்தபுத்தூா் ஊராட்சியில் தலைவராக இருக்கும் இந்திரா கதிரேசன் என்பவா் எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. மாறாக அவரது கணவா் மற்றும் 2 மகன்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகள் தோ்வு நடவடிக்கைகள், எதையும் தெரிவிக்காமல் நூறு நாள் பணியாளா்களிடம் கையெழுத்து பெறுவது, கிராம சபைக் கூட்டம் நடத்துவது, வரவு - செலவுகள் என்பன உள்ளிட்ட நடவடிக்கைளை துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்களிடம் தெரிவிக்காமல் செயல்படுத்தி வருகின்றனா். எனவே ஆட்சியா் இந்த மனுக்களைப் பரிசீலித்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT