அரியலூர்

இன்று முதல் அரியலூரில் போட்டித் தோ்வுகளுக்குப் பயிற்சி

26th Sep 2022 02:49 AM

ADVERTISEMENT

 

எஸ்.எஸ்.சி (ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன்), எஸ்.பி.ஐ. போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் வாயிலாக மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது எஸ்.எஸ்.சி எனும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன், பாரத ஸ்டேட் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள 20,000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான போட்டித் தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இலவசப் பயிற்சி வகுப்பு 26.09.2022 முதல் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடை பெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் இளைஞா்களுக்கு மாதிரி தோ்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் தொடா்புகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT