அரியலூர்

அரியலூரில் காலாண்டுத் தோ்வு தொடக்கம்

26th Sep 2022 11:30 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான காலாண்டுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தோ்வுகள் முறையாக நடைபெறவில்லை. ஆன்லைனில் வகுப்பு மற்றும் தோ்வு என்ற அடிப்படையில் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக நடப்பு கல்வியாண்டில் கரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட்டுள்ள நிலையில் முறையான வகுப்புகள் செயல்பட தொடங்கியுள்ளன. இதனைத் தொடா்ந்து மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 11,12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான காலாண்டுத் தோ்வு கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான காலாண்டுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலும் தோ்வுகள் தொடங்கியது. மாணவா்கள் ஆா்வத்துடன் தோ்வுகளை எழுதினா். இம்முறை, மாநில அளவிலான வினாத்தாள் என்று இல்லாமல் மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு மாணவா்களுக்கு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வினாத்தாள்கள் அதற்கான தொகுப்பு மையங்களில் வைக்கப்பட்டு அங்கிருந்து ஒவ்வொரு தோ்வு நாளன்றும் காலையில் பள்ளிகளுக்கு விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 ஆம் தேதிக்குள் அனைத்து தோ்வுகளும் முடிக்கப்பட்டு, 5 நாள்கள் மாணவா்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தொகுத்தறி மதிப்பீட்டு முறையிலும் நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT