அரியலூர்

குட்கா கடத்திவந்த 2 போ் கைது

25th Sep 2022 01:16 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், திருமானூா் காவல் துறையினா், ஏலாக்குறிச்சி பகுதியில் சனிக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வந்த சுமை ஆட்டோவை மறித்து சோதனை செய்தபோது, அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா பொருள்கள் சுமை ஆட்டோவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த மேலவரப்பனங்குறிச்சி ராஜேந்திரன் மகன் நீதிமொழி(32), உடன் வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த மருதமுத்து மகன் முருகேசன்(50) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். மேலும், 15 மூட்டை ஹான்ஸ், 15 மூட்டை குட்கா (பாக்கு) ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு சுமாா் ரூ.3.50 லட்சம் இருக்கும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT