அரியலூர்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவா் மீது வழக்கு

25th Sep 2022 01:14 AM

ADVERTISEMENT

 

கொலை செய்ய முயன்ற கணவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

செந்துறை அருகேயுள்ள மத்துமடக்கி கிராமத்தைச் சோ்ந்த சிலம்பரசன் மனைவி அருள் (26). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் கொடுக்கூா் - குவாகம் இடையே உள்ள முந்திரித் தோப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தனா். அப்போது, இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சிலம்பரசன், தனது மனைவி அருளை தாறுமாறாகத்

தாக்கியதில் அருள் மயக்கமடைந்தாா். அவா் இறந்து விட்டதாக நினைத்த சிலம்பரசன் தனது மனைவியின் சேலையைக் கழற்றி முந்திரி மரத்தில் தூக்கிட்டபடி மாட்டிவிட்டு தப்பியோடிவிட்டாா்.

ADVERTISEMENT

தகராறின்போது, எழுந்த அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதியினா் வந்து பாா்த்தபோது, அருள் மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து புகாரின்பேரில், செந்துறை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து சிலம்பரசனைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT