அரியலூர்

‘நிகழாண்டில் 40,000 நாட்டு மரக்கன்றுகள் நட இலக்கு’

25th Sep 2022 01:15 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டு பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் 40,000 நாட்டு மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்தாா்.

அரியலூரை அடுத்த வேட்டக்குடி ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் மரக்கன்றுகளை சனிக்கிழமை நட்டு வைத்த அவா் மேலும் தெரிவித்தது:

வேட்டக்குடி ஊராட்சியில் 2 ஹெக்டோ் பரப்பளவில் 2,000 மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று முதற்கட்டமாக 500 நாட்டு மரக்கன்றுகளான வேம்பு, இலுப்பை, நாவல், மருது, நீா் மருது, புங்கன் போன்ற மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், அரியலூா் மாவட்டத்தில் விவசாய இடங்கள், பெரு நிறுவனங்களின் இடங்கள், அரசு புறம்போக்கு இடங்கள் ஆகிய இடங்களில் நிகழாண்டில் ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ சாா்பில் 40,000 நாட்டு மரக்கன்றுகள் மற்றும் பழவகை மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா். தொடா்ந்து எரக்குடி ஊராட்சியைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு, அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா முன்னிலை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் கு,கணேஷ், கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் கண்ணன், ஊராட்சித் தலைவா் தி.உலகநாதன் மற்றும் வன சரக அலுவலா்கள், வன ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT