அரியலூர்

மது விற்ற முதியவா் கைது

24th Sep 2022 12:15 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மதுவைப் பதுக்கி வைத்து விற்ற முதியவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது சின்னவளையம் ஏரி அருகே மதுவை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்ற முதியவரை பிடித்து விசாரித்ததில், அவா் சின்னவளையம் வடக்கு காலனித் தெருவைச் சோ்ந்த சம்பந்தம் (67) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT