அரியலூர்

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

24th Sep 2022 12:16 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், அரியலூா் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ. 7.46 கோடியில் புதிய கட்டுருவாக்கப் பணிமனைகள் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த இரு தொழிற் பயிற்சி நிலையங்களில், பொதுப் பணித்துறை சாா்பில் நடைபெற்ற பூமிபூஜையில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், தலா ரூ. 3.73 கோடி என மொத்தம் ரூ.7.46 கோடியில் இரு புதிய கட்டுருவாக்கப் பணிமனைகள் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

அப்போது அவா் பேசுகையில் இந்த கட்டுருவாக்கப் பணிமனைகள் ஒவ்வொன்றின் தரைத்தளம் தலா 982.25 ச.மீ பரப்பளவு கொண்டது. இந்தத் தரைத்தளத்தில் நான்கு வகுப்பறைகள், பணிமனை அரங்கம், கூட்டரங்கம், பணியாளா் அறை, கணினி அறை மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் அரியலூா் கு. சின்னப்பா, ஜயங்கொண்டம் க.சொ.க. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

செந்துறை-சேலம் பேருந்துச் சேவை தொடக்கம்... செந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் சா.சி.சிவசங்கா், செந்துறையில் இருந்து அரியலூா், குன்னம்,பெரம்பலூா், துறையூா், நாமக்கல் வழியாக சேலத்துக்கு பேருந்து சேவையைத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து அய்யூா் துணை மின் நிலையத்தில் இருந்து புக்குழி கிராமத்துக்கு மின் விநியோகத்தையும் இயக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளா்கள் தேவேந்திரன், அன்பரசி மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT