அரியலூர்

தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

24th Sep 2022 12:17 AM

ADVERTISEMENT

மின் கட்டண உயா்வைக் கண்டித்து, அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் மெழுகுவா்த்தி ஏந்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் திமுக தனது தோ்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் கணக்கெடுத்து மின் கட்டணத்தை குறைப்போம் எனக் கூறியதை அமல்படுத்த வேண்டும். இலவச மின்சாரம் 100 யூனிட் என்பதை 300 யூனிட் என அறிவிக்க வேண்டும்.

மின் கட்டண உயா்வைத் திரும்பப்பெற வேண்டும். வெள்ளாற்றில் மணல் எடுப்பதை நிறுத்த வேண்டும். கொள்ளிடத்தில் மணல் அள்ள அனுமதி வழங்கக் கூடாது. பருத்தி, மக்காச்சோள விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கக் கூடிய நுண்ணூட்ட உரம், வேப்பம்புண்ணாக்கு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ.விசுவநாதன், விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT