அரியலூர்

சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞா் போக்சோவில் கைது

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் வடக்கு காலனித் தெருவைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு மகன் ராஜேஷ் (22). கூலித் தொழிலாளியான இவா், தனியாா் செவிலியா் கல்லூரியில் பயிலும் 17 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்தாா். இதையறிந்த அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ராஜேஷை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT