அரியலூர்

அதிமுக சாா்பில் அண்ணா பிறந்தநாள் விழா

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை இரவு அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், அரியலூா் மாவட்ட அதிமுக செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு மேலும் பேசியது:

பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது திமுக. நீட் தோ்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 இப்படி பல்வேறு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மேலும், இவா்களது ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. கஞ்சா விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. போதாது குறையாக மின் கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளது.

அம்மா மருந்தகம், தாலிக்குத் தங்கம், அம்மா உணவகம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு படிப்படியாக மூடி வருகிறது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தோம். ஆனால், திமுக ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கான நிதியை பறித்துக்கொண்டு ‘நம்ம ஊரு சூப்பா்’ என்று ஊருக்கு ஊா் விளம்பரப் பலகை வைத்துள்ளனா்.

ADVERTISEMENT

எனவே மக்கள் விரோத ஆட்சி செய்து வரும் திமுக-வை வீழ்த்த வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுகவினா் அனைவரும் ஒற்றுமையாக இருந்து களப்பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், அக்கட்சியின் அமைப்புச் செயலா் சிவா,ராஜமாணிக்கம், எழுத்தாளா் பா.தில்லைசெல்வம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் ஆ.இளவரசன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா். மாவட்ட மகளிரணிச் செயலா் ஜீவாஅரங்கநாதன், மாவட்ட மாணவரணிச் செயலா் ஓ.பி.சங்கா் மற்றும் நகரம், ஒன்றியக் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முன்னதாக மாவட்ட அவைத் தலைவா் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் வரவேற்றாா். முடிவில் நகரச் செயலா் செந்தில் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT