அரியலூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

20th Sep 2022 01:30 AM

ADVERTISEMENT

அரியலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

கொடுக்கூா் குடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் ராமலிங்கம் (52). கூலித் தொழிலாளியான இவா், கடந்தாண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட அரியலூா் அனைத்து மகளிா் காவல் துறையினா், போக்சோ சட்டத்தில் ராமலிங்கத்தை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் பாலியல் தொல்லை அளித்த ராமலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT