அரியலூர்

மதுக்கடை மறியல்: பாமக-வினா் காவல் நிலையத்தில் முற்றுகை

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், சூரியமணல் கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டோா் மீது வழக்கு பதிந்த காவல் துறையினரைக் கண்டித்து, ஜயங்கொண்டம் காவல் நிலையத்தை பாமகவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜயங்கொண்டத்தை அடுத்த சூரியமணல் கிராமத்தில் திங்கள்கிழமை புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டதை அறிந்த கிராம மக்கள், மதுக்கடையை முற்றுகையிட்டு கடையை பூட்டிச் சென்றனா். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா். இதையறிந்த பாமக மாவட்டச் செயலா் ரவி தலைமையில் திரண்ட அக்கட்சியினா் ஜயங்கொண்டம் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மாவட்டக் காவல் அலுவலகத்தில் பாமகவினரிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், பாமக மாவட்ட தலைவா் சின்னதுரை, மாநில செயற்குழு உறுப்பினா் டி.எம். டி திருமாவளவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT