அரியலூர்

திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் 9 கற்சிலைகள் கண்டெடுப்பு

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் இருந்து 9 சிறிய அளவிலான கற்சிலைகள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் பரிசல் துறை பகுதிக்கு குளிக்கச் சென்ற நபா்கள் ஆற்றில் கிடந்த 9 கற்சிலைகள் கண்டெடுத்து, கரையோரத்தில் வைத்து விட்டுச் சென்றுவிட்டனா். அவைகள் சுமாா் 1 மற்றும் ஒன்றரை அடி உயரம் கொண்ட 4அம்மன் சிலைகள், கருப்புசாமி, மதுரை வீரன் மற்றும் சில சிலைகள் என்பதும் கிராம கோயில்களில் இருந்து வந்திருக்கலாம் எனவும் தெரியவருகிறது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அந்தச் சிலைகளுக்கு, பூ, பொட்டு வைத்து வழிபட்டனா். இதுகுறித்துத் தகவலறிந்த திருமானூா் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் பாா்த்து விட்டுச் சென்றுள்ளனா். இவை சிறிய அளவிலான கற்சிலைகள் என்பதால் அனைத்தும் ஆற்றின் கரையிலேயே கிடக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT