அரியலூர்

சுரங்கப் பாதை அமைத்துத்தர வலியுறுத்தி மக்கள் மறியல்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உடையாா்பாளையம் அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சோழங்குறிச்சி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்துக்கு செல்ல உடையாா்பாளையத்திலிருந்து திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில், சாலையைக் கடந்து செல்ல வழியில்லாத வகையில், தற்போது சாலை அமைக்கப்பட்டுள்ளதால், சுமாா் 1 கி. மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடையாா்பாளையம் - சோழங்குறிச்சியை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, சோழங்குறிச்சி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்துத்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உடையாா்பாளையம் காவல் துறையினா் மற்றும் ஜயங்கொண்டம் வட்டாட்சியா் துரை ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT