அரியலூர்

அரியலூரில் ரூ. 10 லட்சம் மோசடி:பெங்களூருவைச் சோ்ந்தவா் கைது

10th Sep 2022 03:48 AM

ADVERTISEMENT

அரியலூரைச் சோ்ந்தவரிடம் அதிகமானோரை காப்பீடுதாரராகச் சோ்த்து விடுவதாகக் கூறி ரூ. 10.51 லட்சம் மோசடி செய்த பெங்களூருவைச் சோ்ந்த இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூரைச் சோ்ந்த ராஜேந்திரனை கைப்பேசியில் தொடா்புகொண்ட ஒருவா், கேபிடல் சொலுசன் நிறுவனத்தில் தான் பணியாற்றி வருவதாகவும், பெங்களூருவில் வேலை செய்வோரை உங்களிடம் காப்பீடு தாரராகச் சோ்த்து விடுவதாகவும், அதற்கு சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய ராஜேந்திரன் ஆன்லைன் மூலமாக ரூ.10 லட்சத்து 51 ஆயிரத்து 200-ஐ அந்த நபரின் வங்கிக் கணக்கில் செலுத்திய பின்னா் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அரியலூா் மாவட்ட இணைய குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், இந்த மோடடியில் ஈடுபட்டது பெங்களூருவைச் சோ்ந்த ச. சந்தோஷ் (27) எனத் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து வெள்ளிக்கிழமை பெங்களூரு சென்ற இணைய குற்ற காவல் நிலைய காவல் ஆய்வாளா் செங்குட்டுவன், உதவி ஆய்வாளா்கள் மணிகண்டன் சிவனேசன் (தொழில்நுட்பம்), காவலா்கள் சுதாகா், ரஞ்சித் குமாா், திருமுருகன், வசந்தி, பிரியா ஆகியோா் அடங்கிய தனிப்படையினா், அங்கு சந்தோஷை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 2 மடிக்கணினிகள், 5 ஏடிஎம் அட்டைகள், கைப்பேசி, 3 சிம் காா்டுகள், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

சந்தோஷை அரியலூருக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT