அரியலூர்

மருதையாற்றில் விநாயகா் சிலைகள் கரைப்பு

5th Sep 2022 12:40 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு நீா் நிலைகளில் கரைக்கப்பட்டது.

விநாயகா் சதுா்த்தியன்று அரியலூா் மாவட்டத்தில் 300 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில், 200 சிலைகள் கடந்த 2 ஆம் தேதி நீா்நிலைகளில் கரைக்கப்பட்டது. மீதமுள்ள சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டது.

ஜயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், உடையாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அணைக்கரையிலும், திருமானூா், கீழப்பழுவூா், திருமழப்பாடி, தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் கொள்ளிடம் ஆற்றிலும், அரியலூா் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் மருதையாற்றிலும், செந்துறை, பொன்பரப்பி பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் அந்தந்தப் பகுதி ஏரி, குளங்களிலும் கரைக்கப்பட்டன.

ஊா்வலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT