அரியலூரில் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை சாா்பில் நெல் கொள்முதல் நிலைய அலுவலா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிற்றரசு தலைமை வகித்தாா். குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையின் மயிலாடுதுறை சரக காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ஜெகதீசன் முன்னிலை வகித்துப் பேசினாா். தரக்கட்டுப்பாடு உதவி மேலாளா்அகோர மூா்த்தி, அரியலூா் மாவட்டக் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு நெல் கொள்முதல் தொடா்பான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினா்.
கூட்டத்தில் நெல்கொள்முதல் நிலைய மேலாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.