அரியலூர்

நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

19th Oct 2022 12:15 AM

ADVERTISEMENT

அரியலூரில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், ஆனால் அரியலூா் நகரப் பகுதிகளிலுள்ள வணிக நிறுவனங்களில் நெகிழிப் பொருள்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரியலூா் நகராட்சி சுற்றுச்சூழல் பொறியாளா் அகிலா, சுகாதார ஆய்வாளா் தா்மராஜ் உள்ளிட்டோா் கொண்ட சுகாதாரப் பணியாளா்கள் அரியலூா் நகராட்சிகளுக்குட்பட்ட மங்காய் பிள்ளையாா்கோயில் தெரு, சின்னக் கடைத்தெரு, பெரிய கடைத்தெரு, மாா்க்கெட் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, பல்வேறு கடைகளில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்து அழித்தனா். தொடா்ந்து இந்த ஆய்வு நடைபெறும் எனத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT