அரியலூர்

ஆற்றுக் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை

19th Oct 2022 12:16 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றுக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயா்ந்து கொள்ளுமாறு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கனஅடி நீா்வரத்து அதிகளவில் வந்து கொண்டிருப்பதால், ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளைக் குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம். கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

மேலும், பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்கள் சுயபடம் (செல்ஃபி) எடுப்பதைத் தவிா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆறு, கால்வாய்கள் மற்றும் நீா்நிலைகள் அருகே தங்கள் குழந்தைகள் செல்லவிடாமல் பெற்றோா்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பாலங்களைத் தவிர நீா்நிலைகளைக் கடந்து செல்லும் இதர பாதைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் பொதுமக்கள் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT