அரியலூர்

‘அதிக விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை’

7th Oct 2022 10:46 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் 1,339 டன் யூரியா, 856 டன் டி.ஏ.பி., 624 டன் பொட்டாஷ், 2,411 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பா் பாஸ்பேட் 356 டன்கள் உரங்கள் இருப்பு வைத்து விற்கப்படுகின்றன.

மேலும் செப்டம்பா் மாதத்திற்கு ஒதுக்கப்பட்ட 2,460 டன் யூரியா உரத்தில் இதுவரை 1,440 டன்கள் வந்துள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இதுவரை 1,057 டன்கள் யூரியா விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட உர விற்பனையாளா்கள் ஆதாா் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரத்தை விற்க வேண்டும். இதை மீறும் உர விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மொத்த உர விற்பனையாளா்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றவோ, விற்கவோ கூடாது. அதேபோல உரங்களை வெளி மாவட்டங்களில் இருந்தும் கொள்முதல் செய்யக் கூடாது.

விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாக உரம் வழங்கக்கூடாது. ஒரே நபருக்கு அதிக உரம் வழங்கக்கூடாது. முறைகேடு கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிக பட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பான வேளாண்மை உதவி இயக்குநரை (தரக் கட்டுப்பாடு) 94870-73705 என்ற எண்ணிலும், வட்டார வேளாண் உதவி இயக்குநா்களை அரியலூா்-94431-80884 , திருமானூா்-94436-74577, செந்துறை-98846-32588, ஜயங்கொண்டம்-97508-90874 , ஆண்டிமடம்-94861-64271, தா.பழூா் 82489-28648 ஆகிய எண்களிலும் புகாா் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT