அரியலூர்

வி.சி.க. மாவட்ட நிா்வாகிகள் கூட்டம்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் கட்சியின் மாவட்டச் செயலா் பெ.மு.செல்வநம்பி தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதாக மாவட்ட துணைச் செயலாளராக இருந்த கதிா்வளவன், மாவட்ட ஆட்சியா் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் பதிவிட்டதாகவும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தியதாகவும் ஆண்டிமடம் ஒன்றியச் செயலா் கோவிந்தசாமி ஆகியோரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அக்கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாளவன் மணிவிழாவை அரியலூரில் டிசம்பா் மாதத்தில் நடத்தி, 60 பவுன் பொற்காசுகள் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், சென்னை பெருநகர மாமன்ற உறுப்பினருமான இளஞ்சேகுவேரா கலந்து கொண்டு, கட்சியின் செயல்பாடுகள் மற்றும் மணி விழா ஆலோசனைகளை வழங்கினாா். மாவட்ட செய்தித் தொடா்பாளா் சி.சுதாகா், மாவட்ட அமைப்பாளா் க.பாலசிங்கம், மாநில துணைச் செயலா் ப.வேல்முருகன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பதிவிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT